தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: இந்தோனீசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் நேற்று தன் மனைவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் குர்தீப் சிங், மற்றொரு இந்தோனீசியப் பெண் உள்பட 14 பேருக்கு அந்நாடு மரண தண்டனை விதித்தது. இவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்தது. இதற்கிடையே, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற் காக 14 கைதிகளும் அங்குள்ள நுசகம்பங்கன் தீவு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக வும் அவர்களைச் சுட்டுக்கொன்று தண்டனை நிறைவேற்றிய பின்னர் உடல்களை எடுத்து வருவதற்காக 14 சவப்பெட்டிகளுடன் ஆம்புலன் சுகளும் போய்ச் சேர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவருக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த மூவருக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நேற்று முன்தினம் இரவு நிறைவேற்றப் பட்டது. இதற்கிடையே மற்ற 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்று தகவல்கள் வெளியாகியது. அதற்கான கார ணம் குறித்து அந்நாட்டு அரசாங் கம் எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், இந்தோனீசியா வில் மரண தண்டனை விதிக்கப் பட்ட இந்தியருக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை யும் அவரைக் காப்பாற்ற தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றும் மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!