இரவு முழுவதும் தவித்த மக்கள்

­­­குர்­கான்: இந்­தி­யா­வின் வட, வட­கிழக்கு மாநி­லங்களில் பெய்து வரும் கனமழை கார­ண­மாக மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டு உள்ளது. கடும் மழை கார­ண­மாக சாலை களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்து ஓடி­ய­தால், குர்­கா­னில் போக்கு வரத்து முடங்கியது. தேசிய நெடுஞ்சாலை­யில் ஏற் பட்ட இந்த நெரி­ச­லால் 15 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து முடங் கியது. இதனால், வாகனமோட்­டி­கள் நேற்று முன்­தி­னம் இரவு முழு­வதை­யும் சாலையிலேயே கழிக்க நேர்ந்தது. இதனால், டெல்­லி­யில் இருந்து குர்­கா­னுக்கு வாக­னங்களில் வர­வேண்டாம் என்று குர்கான் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். குர்கான் பகு­தி­யில் உள்ள பள்­ளி­களுக்கு இரண்டு நாட்­களுக்கு விடுமுறை அளிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று பிற்­ப­கல் வரை டெல்லி= குர்கான் சாலை இயல்பு நிலைக்குத் திரும்ப­வில்லை என்று அங்­கி­ருந்து வரும் தக­வல்­கள் தெரி விக்­கின்றன.

இதற்­கிடையே, பிரம்­ம­புத்­திரா ஆற்றில் வெள்­ளப்­பெ­ருக்கு அதி கரித்து வரு­வ­தால், அசாமில் லட்­சக்­க­ணக்­கா­னோர் வீடுகளை இழந்து தவிக்­கின்ற­னர். இதனால் பிரம்­ம­புத்­திரா நதிக்­கரையை ஒட்டிய ஊர்­களிலிருந்து லட்­சக்­க­ணக்­கா­னோர் வீடு­களை­விட்­டுப் பாது­காப்­பான இடங்களுக்­குக் குடி­பெ­யர்ந்­து உள்­ள­னர். மேலும் எரி­பொ­ருள், உண­வுப் ­பொ­ருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றிற்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இந்நிலையில், அசாமின் காசி­ரங்கா தேசியப் பூங்கா­வின் பெரும்ப­குதி வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ள­தால் ஆயி­ரக்க­ணக்­கான விலங்­கு­கள் இடம்பெயர்ந்­துள்­ள தாகவும் சில விலங்குகள் உயி­ரி­ழந்த­தாகவும் வனத்­துறை அதிகாரி கள் கூறினர். இதேபோல், பெங்களூரு சாலையில் கரைபுரண்ட வெள்ள நீரைக் கடக்க மக்கள் படகுகளைப் பயன்படுத்தினர். ஒரு சிலர் தேங் கிய நீரில் மீன்பிடிக்கத் தொடங் கினர். ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டிய 12 அடி உயர தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

சாலைகளில் தேங்கிய வெள்ளநீரால் டெல்லி=குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியதால் சுமார் 12 மணி நேரம் வாகனமோட்டிகள் சிக்கித் தவித்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!