மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்: 261 பேர் கைது

திருவாரூர்: டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது 261 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று முன்தினம் திருவாரூர் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இங்குள்ள தேவாகண்ட நல்லூர் கடைவீதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு வகையிலும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் நடத்தினர். எனினும் விடிவுகாலம் பிறக்கவில்லை. மாவட்ட நிர்வாகமோ காவல்துறையினரோ மதுக்கடையை அகற்றுவ தற்கான நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை தேவாகண்டநல்லூர் கிராம மக்கள், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கடைவீதியில் உள்ள மதுபான கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டக் குழுவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் காளியப்பன் உள்ளிட்ட கிராம மக்கள் 261 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!