மாயமான விமானத்தில் ‘சிக்னல்’ அனுப்பும் கருவி பொருத்தப்படவில்லை எனத் தகவல்

சென்னை: நடுவானில் மாயமான விமானப்படை விமானத்தில் சிக்னல் (சமிக்ஞை) அனுப்புவதற் கான கருவியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இத னால் புதிய விவாதங்களும் எழுந்துள்ளன. கடந்த மாதம் 22ஆம் தேதி விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 என்ற சிறிய ரக விமானம் அந்தமான் சென்றபோது திடீரென மாயமானது.

அது கடலில் விழுந்திருக்க லாம், ஆந்திர மாநில வனப்பகுதி யில் விழுந்திருக்கலாம் என பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. தேடுதல் நடவடிக்கை நீண்டு கொண்டே போகும் நிலையில், விமானத்திற்கு ஏற்பட்ட கதி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து ஏதேனும் ஒலிக்குறிப்புகள் (சிக் னல்) கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த விமானத் தின் கருப்புப் பெட்டியில், கடலுக்கு அடியிலிருந்து சிக்னல் அனுப்பும் கருவியே இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

"அந்தக் கருவி இருந்திருந்தால் விமானம் எங்கிருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்திருக்கலாம். அந்த விமானத்தில் பொருத்தப் பட்டிருந்த இருப்பிடத்தை காட்டும் தற்காலிக கருவியான, 'எமர் ஜென்சி லொகேஷன் டிரான்ஸ் மீட்டர்' மூன்று நாளில் பேட்டரியை இழக்கக்கூடியது. அந்தக் கருவி, செயற்கைக் கோள்களுக்கு சங் கேத முறையில் சிக்னல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது. "ஆனால், அதிலிருந்தும் எந்தக் குறிப்புகளும் வரவில்லை. விமானம் மாயமாகி 10 நாட் களுக்கு மேல் ஆகியிருந்தாலும் தேடுதல் பணியின் வேகம் குறையவில்லை," என்று கடலோரக் காவல் படை அதிகாரி கூறியதாக தமிழக ஊடகம் தகவல் வெளியிட் டுள்ளது. விமானத்தில் முக்கிய கருவி பொருத்தப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!