அரசுத்தரப்பில் பதில் இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த குறைபாடுகள் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார்.
மத்தியில் உள்ள பாஜக அர சுக்கு நேசமான அதிமுக ஆட்சி யினால் அதிக நிதியைப் பெற முடியாமல் போனது ஏன் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
"பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசால் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது என்று தமிழக நிதியமைச்சர் கூறுவது ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. பீகார் ஆட்சியும், உத்தரப்பிரதேச ஆட்சியும் மத்திய பாஜகவுக்கு எதிரானவை. இப்படி எதிரான ஆட்சிகள் அதிக நிதியைப் பெற முடிகிறபோது மத்திய பாஜகவுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியைப் பெற முடியாமல் போனது ஏன்? மத்திய அரசுடன் கடுமை யாக வாதாடி அதிக அளவில் நிதியைப் பெற முடியவில்லையா?" என்றும் கருணாநிதி கேட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!