தமிழகம் முன்னேற வேண்டுமானால் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை: திருமா

சென்னை: தமிழகம் அனைத்துத் தளங்களிலும் முன்னேற வேண்டு மெனில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கிராமம், நகரம் என எங்கும் பெண்களுக்குப் பாது காப்பற்ற நிலை உருவாகி வருவதாகக் கவலை தெரிவித் துள்ளார். "சென்னையில் ரயில் நிலை யத்தில் நடைபெற்ற இளம்பெண் படுகொலை, சேலத்தில் ஒரு பெண் செய்துகொண்ட தற்கொலை, விழுப்புரத்தில் நடந் துள்ள கொடூரக் கொலை, தற் போது திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்த்தப்பட்ட படுகொலை, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சாலியமங்கலம் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள பயங்கர மான படுகொலை என ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன் கொடுமைகள், படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன," என்று திருமாவளவன் அண்மைய சில சம்பவங்களைப் பட்டியலிட் டுள்ளார்.

சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்டு உயிரிழக் கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திருடர்கள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள் முதலானவர்களாலும் வக்கிரம் பிடித்த கொடூரர்களாலும் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். "ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் பெண்கள் நடத்தப் படும் நிலையைக் கொண்டே மதிப்பிடுவார்கள். "பெண்களின் உரிமையை மதிக்கும் மனோபாவத்தை நமது ஆண் பிள்ளைகளுக்குப் பள்ளி யில் இருந்தே உருவாக்கி வளர்க்க வேண்டும். அதற்கு உகந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்," என தொல். திருமாவளவன் தமது அறிக்கையில் மேலும் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!