மும்பையில் கட்டடம் இடிந்ததில் இருவர் பலி, பலர் காயம்

மும்பை: மும்பைப் பிவாண்டி பகு­­­தி­­­யில் இரு மாடி கட்­­­ட­­­டம் இடிந்து விழுந்த­­­­­­தில் இருவர் பலி­­­யா­­­கி­­­யுள்­­­ள­­­னர். இன்னும் பலர் இடி­­­பாடு­­­களில் சிக்­­­கி­­­யுள்­­­ள­­­தா­­­கச் செய்­­­தி­­­கள் தெரி­­­வித்­­­தன. மீட்புப் படை­­­யி­­­னர் இடி­­­பாடு­­­களி­­­லி­­­ருந்து நால்வரை உயி­­­ரு­­­டன் மீட்­­­டுள்­­­ள­­­னர். ஆனால் மேலும் பலர் சிக்­­­கி­­­யி­­­ருக்க லாம் என்று அஞ்சப்­­­படு­­­கிறது. கல்யாண் சாலையில் உள்ள அனுமன் தேகடி பகு­­­தி­­­யில் உள்ள அந்தக் கட்­­­ட­­­டம் நேற்றுக் காலை 8 மணி­­­ய­­­ள­­­வில் இடிந்து விழுந்தது. தேசியப் பேரிடர் பணிக்­­­கு­­­ழு­­­வி­­­ன­­­ரும் தீயணைப்­­­புப் படை­­­யி­­­ன­­­ரும் மீட்புப் பணி­­­களில் ஈடு­­­பட்டு வரு­­­கின்ற­­­னர். அந்தக் கட்­­­ட­­­டத்­­­தில் வசித்து வரும் குடும்பங் களின் சரியான எண்­­­ணிக்கை இதுவரை வெளி­­­யா­­­க­­­வில்லை.

அது மிகவும் பழை­­­ய­­­கா­­­லக் கட்­­­ட­­­டம் என்றும் 'அபா­­­ய­­­மான கட்­­­ட­­­டம்' என்ற பிரிவின் கீழ் இருப்­­­ப­­­தா­­­க­­­வும் பிவாண்டி தாசில்­­­தார் வைசாலி லம்பாதே தெரி­­­வித்­­­தார். ஜூலை 31ஆம் தேதி இரு மாடி குடி­­­யி­­­ருப்­­­புக் கட்­­­ட­­­டம் இடிந்து விழுந்த­­­தில் ஒன்பது பேர் பலி­­­யானார்­­­கள், 10 பேர் படு­­­கா­­­ய­­­மடைந்த­­­னர் என்பது குறிப்­­­பி­­­டத்­­­தக்­­­கது.

கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் மக்களும் மீட்புப் பணியாளர்களும். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!