‘ஆந்திர முதல்வரே திரும்பிப் போ’ என முழக்கம்; மறியல்

கோவை: ஆந்திராவில் 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை வந்துள்ள ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதி ராக 'ஆந்திர முதல்வரே திரும்பிப் போ' என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இதன் காரண மாக பலத்த போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சிறைவாசம் அனுபவித்து வரும் 32 தமிழர்களின் சார்பில் ஆந்திர நீதிமன்றத்தில் முன்னிலை யாகி வாதாட வழக்கறிஞர்கள் இருவரை தமிழக அரசு நியமித் துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சட்டப்படியான நடவடிக் கைகளை மேற்கொள்ள திருப் பதிக்கு புறப்பட்டுச் சென்றனர். சந்திரபாபு நாயுடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலி சார் கைது செய்தனர். இதேபோல் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பன்னீர் செல்வம் உள்பட 16 பேரையும் போலிசார் கைது செய்தனர்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கில் நடைபெற்ற என்.டி.ராமராவின் பேரன் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வதற்காக சந்திரபாபு நாயுடு விமானம் மூலம் கோவை வந்தார். ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இந்நிலையில், சந்திரபாபுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடக் கழகத் தினர் அவினாசி சாலை அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட் டினர். 'அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த சந்திரபாபுவே திரும்பிப் போ', 'தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஆந்திர முதல்வரே திரும்பிப் போ' என்ற வாசகங்களை முழங்கினர். செம்மரக் கடத்தல்காரர்கள் என்று கூறி தமிழர்கள் 32 பேரை கைது செய்தது, பாலாற்றில் தடுப்ப ணைகள் கட்டுவது ஆகியவற்றை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்கள் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்துக்கு தீ வைத்தும் எரித்தனர். இதேபோல் சமூக நீதிக் கட்சியினர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் இருந்து கருப்புக் கொடி ஏந்தியபடி சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த ஓட்டல் நோக்கிச் சென்றனர். இவர்கள் பின்னர் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!