தமிழக காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்

சென்னை: தமிழக காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரசில் கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துள்ளதால் புதிய மாநிலத் தலைவரை நியமிப் பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒருமித்த ஆதரவுடன் புதிய தலைவரை நியமிக்க இயலாத காரணத்தா லேயே அக்கட்சித் தலைமை இம்முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூத்த தலைவர் குமரி அனந்தன் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழக காங்கிரஸ் தலை வர் பொறுப்பில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகினார். தேர்த லில் மாநிலத் தலைமை உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் புகார் எழுப்பியதே அவரது பதவி விலகலுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் இளங்கோவன் பதவி விலகி ஐம்பது நாட்கள் கடந்த பிறகும் அவருக்கு மாற்றாக புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழக காங்கிரஸ் பணி கள் முடங்கியுள்ளன. அக்கட்சி யின் மாநில தலைமை அலுவலக மான சத்தியமூர்த்தி பவனும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இந்நிலையில், தமிழக காங்கி ரசுக்கு இடைக்காலத் தலைவர் ஒருவரை நியமித்து, சில நிகழ்ச்சிகளை நடத்த மாநில நிர்வாகிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் புதிய தலைவரை நியமிக்கும் வரை தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். இந்த யோசனையைக் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சின்னா ரெட்டி ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!