புதுடெல்லி: புதுச்சேரி அரசாங்கப் பணிகளில் ஆளுநர் கிரண் பேடி தலையிடுகிறார் என்று டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் குறை கூறியுள்ளனர். இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் தென் மாநிலங்களின் பொறுப்பாளரு மான சோம்நாத் பார்தி, "புதுவை யின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண் பேடி யூனியன் பிரதேசத்தின் பணிகளில் தலையிடுகிறார்," என்று குறிப்பிட்டார். "கிரண் பேடி 'வாட்ஸ்அப்', 'டுவிட்டர்' வழியே தகவல்களைத் தருகிறார். காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர் நேரடி அழைப்பு விடுக்கிறார்.
அவரது பேச்சைக் கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்," என்று சோம்நாத் பார்தி குற்றம் சாட்டினார். ஏற்கெனவே டெல்லி யில் முதல்வரைவிட ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலை யில் புதுவையில் ஆளுநரின் ஆதிக்கம் குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் புதுவை முதல்வர் வி. நாராயண சாமி, தமக்கும் கிரண் பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.