டெல்லியில் மூன்று ஆண்டுகளில் 6,700 பாலியல் பலாத்கார வழக்குகள்

புதுடெல்லி: இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியில் மூன்று ஆண்டுகளில் 6,700 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி யுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் இந்த வழக்குகள் பதிவாகியது என்று காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாலியல் பலாத் காரம் தொடர்பான வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 706 வழக்குகளும் 2013ஆம் ஆண்டில் 1,636 வழக்குகளும் 2014இல் 2,166 வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக 2,199 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டில் 381 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இந்த வழக்குகள் 2015ல் 2,199ஆக அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த 15 ஆண்டு களில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரித்து விட்டது. தற்போதைய ஆண்டில் ஜூலை மாதம் வரையிலும் பாலியல் பலாத் காரம் தொடர்பாக 1,186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, 2012ஆம் ஆண்டில் பெண்கள் தாக்கப்பட்டது தொடர் பாக 727 வழக்குகளும் 2013ல் 3,515 வழக்குகளும் 2014ல் 4,322 வழக்குகளும் 2015ல் 5,367 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வரதட்சணைக் கொடுமை, கணவர், அவரது உறவினர்களால் தாக்கப்படுவது தொடர்பான வழக்குகளும் அதிகரித்து உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!