ரூ.130 கோடி சொத்தை மறைத்ததாக ஆம்ஆத்மி எம்எல்ஏ மீது புகார்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ கர்தார் சிங், ரூ. 130 கோடி அளவிற்கு சொத்துகள், பண்ணை வீடுகள் வைத்துள்ள தும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதும் வரி ஏய்ப்பு செய்துள்ளதும் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி எம்எல் ஏக்கள் மீதான அடுக்கடுக் கான புகார்களால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. டெல்லி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பல்வேறு குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய் யப்பட்டு வரும் நிலையில், இப்போது மற்றொரு குற்றச் சாட்டாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ரூ. 130 கோடி மதிப்புள்ள சொத்துகளை மறைத்ததாகப் புதிய புகார் கிளம்பியுள்ளது.

டெல்லியில் உள்ள மெஹர் வுலி தொகுதி எம்எல்ஏவான கர்தார் சிங்கின் வீடு, அலுவல கங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பினாமி பெயரில் ஏராளமான சொத்துகளை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 12க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்திய தாகவும் ரூ. 130 கோடி அளவிற்கு பினாமி பெயரில் சொத்துகள், பண்ணை வீடுகள் வைத்திருப்ப தாகவும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!