என் பள்ளியை விட உங்களது பொதுக்கூட்டம் முக்கியமா என மோடிக்கு மாணவன் கடிதம்

மத்தியப்பிரதேசம்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்காக பள்ளிப் பேருந்துகளை பயன்படுத்தக் கூடாது என 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவன்ஷ் ஜெயின்(படம்) மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது. பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு தொண்டர்களையும் பொது மக்களையும் அழைத்துவர மாநில அரசு நிர்வாகம் பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது. இதனால் கோபமடைந்த தேவன்ஷ், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உங்களது பொதுக்கூட்டம் எனது பள்ளியை விட முக்கியமானதா-? இது குறித்து ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகானிடம் சொல்லுங்களேன் என கூறியுள்ளான். இதனை அடுத்து மோடி நிகழ்ச்சிக் காக பள்ளிப் பேருந்துகளை இனி பயன்படுத்த மாட்டோம் என அறிவித் துள்ளது ம.பி. அரசு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!