இலவச சிகிச்சைக்கு லஞ்சம்: குழந்தையின் உயிர் பறிபோனதாக பெற்றோர் குற்றச்சாட்டு

ஆளாளுக்கு லஞ்சம் கேட்டு சிகிச்சையைத் தாமதப்படுத்திய தால் தங்களது பத்து மாதக் குழந்தை இறந்துவிட்டதாக இந்தியப் பெற்றோர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்னும் பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமிதா தத், ‌ஷிவ் தத் என்னும் அந்தத் தம்பதியினரின் வேதனைக் குமு றலை இந்தியாவிலுள்ள தொலைக் காட்சி ஒன்று ஒளிபரப்பியது. கடுமையான காய்ச்சல் கண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நிலை மோசமடைந்த கிருஷ்ணா என்னும் தங்களது குழந்தையை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றதாக வும் உள்ளே நுழையும்போதே அனுமதிச் சீட்டு எழுத அங்குள்ள தாதி ஒருவர் லஞ்சம் கேட்டதாக வும் அவர்கள் கூறினர். லஞ்சம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கிய பின்னர் அந்தக் குழந்தைக்கு படுக்கை ஏற்பாடு செய்ய மருத்துவமனை துப்புர வாளர் 30 ரூபாய் லஞ்சம் கேட்ட தாகவும் அதனையும் தாங்கள் கொடுத்ததாகவும் அவ்விருவரும் தெரிவித்தனர். இருந்த பணத்தை எல்லாம் கொடுத்த பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு ஊசி போட மருத்துவ உதவியாளர் லஞ்சம் கேட்டபோது தங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக அந்தத் தம்பதியினர் கூறினர்.

"உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் (இலவச மாக போடப்பட வேண்டிய) ஊசி மருந்துக்கு அவர் பணம் கேட்ட தாலும் அதனைக் கொடுக்க எங் களிடம் பணம் இல்லாததாலும் வாக்குவாதம் ஏற்பட்டு சிகிச்சை தாமதமானது," என்று என்டிடிவி செய்தியிடம் சுமிதா கூறினார். "கொஞ்சம் அவகாசம் கொடுங் கள் நீங்கள் கேட்ட பணத்தைப் புரட்டித் தருகிறோம் என்று நாங்கள் கெஞ்சிய பின்னர் ஊசி மருந்தை எடுத்துவர அவர் சென்றார். ஆனால் அதற்குள் குழந்தை மாண்டுவிட்டது," என்றார் அவர். சிகிச்சை அளிக்கப்படாமல் குழந்தை இறந்ததால் ஆத்திரமுற்ற அக்குழந்தையின் தந்தை, "மருத்துவமனையில் ஒருவர் விடாமல் எல்லோரும் லஞ்சம் கேட்கிறார் கள். உயிருக்கு விலை வைத்ததை எண்ணி துயரப்பட்டோம்," என்று செய்தி நிறுவனங்களிடம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!