சுரங்கம் தோண்டி நகைக்கடையில் கொள்ளை

மந்தாரக்குப்பம்: மந்தாரக் குப்பத்தில் சுரங்கம் தோண்டி நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப் புள்ள ஒன்றரை கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கடலூர் மாவட்டம், மந்தாரக் குப்பம் கடை வீதியில் சுரேஷ் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஊழியர் ஒருவர் கடையைத் திறந்தபோது, பீரோ அருகே ஒரு ஆள் நுழையும் அளவிற்கு தரையில் துளை போடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவை உடைத்து ஒன்றரை கிலோ தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. போலிசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடையின் பின்பக்கம் கருவேலம் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ள நிலையில் அங்கிருந்து பூமிக் கடியில் சுரங்கம்போல பள்ளம் தோண்டி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு 50 லட்சம் ரூபாய். மோப்ப நாய் உதவியுடன் போலிசார் தடயங்களை சேகரித் தனர். கடையின் பின்பக்கம் உள்ள முட்புதரில் கடப்பாறை, உளி, ஆக்சா பிளேடு, மது பாட்டில்கள் கிடந்தன. மந்தாரக்குப்பம் போலிசார் விசாரிக்கின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் குறிஞ்சிப்பாடியில் உள்ள என்எல்சி ஊழியர் வீட்டில் 33 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்தனர். இப்போது நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!