உச்சக்கட்ட விழிப்பு நிலையில் டெல்லி

புதுடெல்லி: இந்தியாவின் 70வது சுதந்திர தினம் நாளை கொண் டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல் லியிலும் மாநில தலைநகரங்களி லும் கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச் சிகளுக்கான ஒத்திகைகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங் கள் நடந்து வரும் நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் எந்த அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி களிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள பிடோர்னி மெட்ரோ ரயில் நிலையத்தில் பல் வேறு பாதுகாப்புத் துறைகள் இணைந்து இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன. மூன்று பயங்கரவாதிகள் அந்த ரயில் நிலையத்தைத் தகர்த்து பயணிகளை பணயக் கைதிகளாக சிறை பிடித்திருப்பதுபோலவும் அவர்களை பாதுகாப்புத் துறை வீரர்கள் சுட்டொழிப்பது போலவும் பாவனைப் பயிற்சி செய்து காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 150 வீரர் கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது பாகிஸ் தான் தீவிரவாதிகள் மிகப் பெரிய குண்டுவெடிப்புகள் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் ஏழு அடுக்கு பாதுகாப்புக்கு உத் தரவிடப்பட்டுள்ளது. டெல்லி முழு வதையும் ஏற்கெனவே பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்துவிட்டனர். உச்சக்கட்ட விழிப்பு நிலையில் டெல்லி வைக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் நகரில் நேற்று நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் பெண் போலிஸ் படையைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!