பாலியல் கொடுமை: அமைச்சர் மீது வழக்குப் பதிய கோரிக்கை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்ணும் அவரது 13 வயது மகளும் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட வழக்கில் மாநில அமைச்சர் அசம் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண் டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்தார். கடந்த ஜூலை 30ஆம் தேதி பெண்ணும் சிறுமியும் உறவினர்களுடன் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஷாஜகான்பூருக்கு காரில் சென்றுகொண்டு இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் அந்த கார் வழிமறிக்கப்பட்டது.

புலந்த்சாகர் என்னுமிடத்தில் மர்ம கும்பல் ஒன்று அந்த காரை தடுத்து நிறுத்திய பின்னர் பெண்ணையும் அவரது மகளையும் வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்றது. அந்த இரு வரையும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்தக் கும்பலில் இருந்தோர் பாலியல் கொடுமை செய்தனர். காரில் இருந்த ஆண்களைக் கட்டிப்போட்ட பின்னர் இந்த அக் கிரமம் அரங்கேற்றப்பட்டது. பாலி யல் பலாத்காரம் செய்த பின்னர் அவர்களிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பல் தலைமறைவாகிவிட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. இச்சம்பவம் தொடர்பில் ஹரியானாவைச் சேர்ந்த பாபுலு உள்ளிட்ட மூவர் கைது செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பாலியல் கொடுமைக்குப் பின்னால் அர சியல் சூழ்ச்சி இருப்பதாக உத்தரப் பிரதேச அமைச்சர் அசம் கான் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி இருந்தார். சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செய்த சதிதான் இச்சம்பவம் என்றும் அவர் கூறி இருந்தார்.

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மும்பை கல்லூரி மாணவி ஒருவர் தீட்டிய நகப்படம். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!