தமிழக நதிகளைக் காக்க அரசியல் சாராத இயக்கம் தொடங்கப்படும்: அன்புமணி

சிவகாசி: தமிழகத்தில் உள்ள நதிகளைக் காக்க அரசியல் சாராத இயக்கத்தை தொடங்கப் போவதாக பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், புதிய இயக்கத்தில் இளையர்கள், விவ சாய அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினர் இணைய இருப்பதாக கூறினார். "ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், தாமிரபணி மாச டைந்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலியில் மாணவர்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா, ரோட்டரி சங்கங்களை அழைத்துப் பேச உள்ளேன். "அதைத் தொடர்ந்து, நதி களைக் காக்க அரசியல் சாராத இயக்கத்தைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்றார் அன்புமணி.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாகக் கூட்ட வேண்டும் என வலியு றுத்திய அவர், அனைத்துக் கட்சியினரோடு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இதுகுறித்து முறையிட வேண் டும் என கேட்டுக் கொண்டார். "காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனே அமைக்க வேண் டும். உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும்," என்றும் அன்புமணி கூறினார். இதற்கிடையே, நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் தருவதாக முன்பே அறிவித்த நடிகர் ரஜினி காந்த், அடுத்த ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியி டம் அதை வழங்க வேண்டும் என தேசிய, தென்னிந்திய நதி கள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பாஜ ஆட்சிக்கு வந்தால், நதிகள் இணைப்பு திட்டம் செயல் படுத்தப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்ததாக வும், ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டத்தை துவங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

"நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தன் பங்களிப்பாக, ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக பல ஆண்டுகளுக்கு முன் ரஜினி கூறியிருந்தார். அவர், விவசாயிகளின் நல்லெண்ண தூதராகச் சென்று, ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியை சந்தித்து, ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும். "நிதியை வழங்காவிட்டால், அவர் வீட்டின் முன், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்," என்று அய்யாக்கண்ணு எச்ச ரிக்கை விடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!