மோடி மீது காங்கிரஸ் அவமதிப்பு புகார்

புதுடெல்லி: டெல்லியில் பாஜகவுக்கு புதிய அலுவல கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி ஆங்கிலேயர்கள் காலத்தில் காங்கிரஸ் சந்தித்ததைவிட சுதந்திர இந்தியாவில் காங்கிரசால் பாஜக பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததாகக் கூறினார். அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர் பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், "பிரதமர் தமது பேச்சு மூலம் ஒட்டுமொத்த சுதந்திர போராட்டத்தையுமே அவமதித்துவிட்டார். அவ ருடைய பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவர் தமது கருத்தை உடன டியாக திரும்பப்பெறுவதோடு சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகை யில் பேசி இருப்பதால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண் டும்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!