சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக...

ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக மின்தூக்கி சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுக் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை 15 முறை மேற்கூரைகளும் 24 முறை தானியங்கி கண்ணாடிக் கதவுகளும் 20 முறை தடுப்புக் கண்ணாடிகளும் 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் ஒருமுறை விளக்குக் கண்ணாடியும் ஒரு முறை அறிவிப்புப் பலகை தொலைக்காட்சியும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது 67வது முறையாக மீனம் பாக்கம் உள்நாட்டு முனையத்தில் மின்தூக்கி அறையின் சுவரில் பதிக்கப்பட்ட இரண்டு அடி அகலமும் ஏழு அடி நீளமும் கொண்ட சலவை கற்களில் ஐந்து உடைந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!