தமிழிசை: போட்டி சட்டமன்றம் நடத்தியது தவறு

தரங்கம்பாடி: திமுகவினர் சட்டமன்ற வளாகத்தில் போட்டிக் கூட்டம் நடத்தியது தவறு என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். திருக்கடையூர் கோயிலுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "சட்டத்தை இயற்றக்கூடிய சட்டமன்றத்தில் போட்டி சட்ட மன்றம் நடத்தியது தவறு என்பதாகவே நான் கருதுகிறேன். சபாநாயகர் உருவ பொம்மை எரிப்பு அநாகரீகமானது. "அதே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவரையும் எதிர்க்கட்சி உறுப்பினர் களையும் சபாநாயகர் இடை நீக்கம் செய்தது தவறு. சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதைவிட வெளி நடப்பு செய்யும் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. "தமிழகத்தில் 20,000 காவல்துறை பணியிடம் காலியாக உள்ளது.

இதனைப் போராட்டம் மூலம் முதல்வர் கவனத்திற்கு பாரதிய ஜனதா கொண்டு சென்றது. "கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் -- திமுக ஆட்சியில் நதி நீர் பிரச்சினையைத் தீர்க்காமல் தற்போது விவசாயிகளிடம் சேர்ந்து போராட்டம் நடத்து வது கேலிக்கூத்து. தமிழகத் தில் குளம், ஆறுகளைத் தூர் வார வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பலம் பொருந்திய கட்சியாக பாரதிய ஜனதா களம் இறங்கும். மக்களே வாக்குப் போட்டு மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுத்தால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது," என்றார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!