ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர்

திருவண்ணாமலை: கொலை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்து வேலூர் காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை தாலுகா வில் ஆய்வாளராகப் பணியாற் றிய பழனி என்ற அந்த ஆய்வாளர், பணம் கேட்டு வழக்கறிஞர் ஒரு வரிடம் மிரட்டல் தொனியில் பேசிய ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் பரவியதையடுத்து அவர் மீது நடவடிக்கை பாய்ந் துள்ளது. தேவதாஸ் என்பவர் மீது கொலை வழக்குப் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக அவ ரது வழக்கறிஞர் குமார் என்பவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார் ஆய்வாளர் பழனி. அப்போது, தமக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்தால் தேவதாசை கைது செய்யாமல் விட்டு விடுவதாகப் பேரம் பேசி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் இடையே கைபேசி வழி இந்த உரையாடல் நடந் துள்ளது.

இந்நிலையில் இந்த உரையாடல் தொடர்பான 11 நிமிட ஒலிப்பதிவு வாட்ஸ் ஆப் மூலம் திடீரெனப் பரவத் தொடங்கியது. தன்னிடம் ரூ.5 லட்சம் ரொக்கமாக இல்லை என வழக்கறிஞர் குமார் தெரிவிக்க, ஏற்கெனவே மூன்று மாதக் காலம் அவகாசம் கொடுத்துவிட்டதா கவும் உடனடியாக தம்மிடம் பணத்தை ஒப்படைக்கவேண்டும் என்று ஆய்வாளர் பழனி மிரட்டுவதும் அந்த ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட் டுள்ள குமாரின் மனைவி திரு வண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பழனி குறித்து புகார் அளித்தார்.

மேலும் வழக்கறிஞர் குமாரிடம் பழனி மிரட்டல் விடுத்ததற்கு சாதகமாக உள்ள ஒலிப்பதிவு அடங்கிய குறுந்தகடையும் அவர் ஒப்படைத்தார். அந்தப் புகாரின் பேரில் ஆய்வாளர் பழனியிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. உடனே அவர் வேலூருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அவர் ஏற்கெனவே பணியாற்றிய காவல் நிலையங் களிலும் அவர் மீது பல்வேறு புகார்கள் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், துறை ரீதியாக நடைபெற்ற விசாரணை யில் பழனி மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து வேலூர் காவல் துறை தலைவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இத னால் பரபரப்பு நிலவுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!