ஐந்து மாதங்களில் ஆயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தில் கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அம்மாநில அரசு அளித்த பதிலில் இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை 1,012 பாலியல் பலாத்கார வழக்குகளும் பெண் களுக்குத் தொல்லை கொடுத்த சம்பவங்கள் தொடர்பாக 4,520 வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலத்தில் சுமார் 1,386 திருட்டு வழக்குகளும் 86 வழிப்பறி தொடர் பான வழக்குகளும் பதிவாகி யுள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. மாநிலத்தில் நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குற்றவியல் பிரிவு சிறப்பு காவல்துறையினர் ஒவ் வொரு மாவட்டத்திலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!