அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் பிரபலம்

கௌகாத்தி: இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் இரோம் ஷர்மிளாவிடம் (படம்) தான் ஓர் இந்தியர்தான் என்பதை உறுதிச் செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை. மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த இரோம் ஷர்மிளா, அண்மையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் இந்தியர் என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாததால், அரசியலில் ஈடுபட அவருக்கு அது பிரச்சினையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது பற்றி பேசிய அவர், "அடையாள அட்டைகளைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதுகிறேன். மணிப்பூரைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் என்னிடம் அடையாள அட்டை இருக்க வேண்டும்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!