நிர்பயா வழக்கு: ஆபத்தான உடல் நிலையில் குற்றவாளி

புதுடெல்லி: டெல்லியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்ற வினய் ஷர்மா திகார் சிறையில் தன்னை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள் ளார். அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதே வழக்கில் தண்டனைப் பெற்ற ராம் சிங்கும் கடந்த 2013ல் திகார் சிறையில் தன்னை மாய்த்துக் கொண் டார். கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் படுகாயம் அடைந்து மிகவும் ஆபத்தான உடல் நிலையில் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்ட அவர் டிசம்பர் 29ஆம் தேதி இறந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon