தமிழகத்தின் கடன்சுமை: பழ.கருப்பையா கவலை

தி.மலை: அதிமுக ஆட்சியில் தமி ழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கூறினார். திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இத்த கைய நிலை நீடித்தால் மக்கள் நிலை மோசமாகும் என்றார். "சொத்துக் குவிப்பு வழக்கில் இருமுறை முதல்வர் பதவியை இழந்து சிறைக்குச் சென்றவர் ஜெயலலிதா. அவர் சிறைக்குச் சென்றபோது சென்னை ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்ட யாகத்தில் பங்கேற்று 'மீண்டும் ஜெயலலிதா வெளியில் வரக் கூடாது' என மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

"சொத்துக் குவிப்பு மேல் முறை யீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அருணாச்ச லேஸ்வரர் நாட்டுக்கு நல்லதைச் செய்துவைப்பார்," என்றார் பழ.கருப்பையா. தமிழக அரசு வருவாய்க்கு மேல் செலவு செய்வதாக விமர் சித்த அவர், கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் 2.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். "மேகதாது அணை பிரச்சி னையில் கர்நாடகாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தீர்மானம் இயற்ற வரவேண்டும் என திமுகவினர் சட்டப்பேரவை யில் பேசினர். "அப்போது அவைக்கு வராத வர்களும் கூட இடைநீக்கம் செய் யப்பட்டனர். இது குறித்து பேரவை யில் பேசிய ஜெயலலிதா, நாகரிகம் இல்லாமல் பலவற்றைக் குறிப்பிட் டார்," என்றார் பழ.கருப்பையா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!