விழுப்புரம்: சமூக நலத்துறை வழங்கிய உதவித் தொகையை அளிக்க ரூ.3,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டார். உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த மாணவன் அஜித்குமாரின் (15 வயது) தந்தை கொளஞ்சி அண்மையில் காலமானார். அவரது குடும்பத்துக்கு சமூக நலத்துறை 12,500 ரூபாயை உதவித் தொகையாக அளிக்க முன்வந்தது. எனினும் இத் தொகையைப் பெற கிராம நிர் வாக அலுவலரின் கையெழுத்து தேவைப்பட்டது.
கையெழுத்துப் போட அவர் ரூ.3,000 லஞ்சம் கேட் டதால் மனமுடைந்துபோனான் சிறுவன். இதையடுத்து உற்றார், உறவினர்களிடம் லஞ்சப் பணத்தை திரட்ட பிச்சை எடுத்துள்ளான். தனது ஊரின் வழியே செல்லும் அரசுப் பேருந்து களிலும் அவன் பிச்சை எடுக்கவே இவ்விஷயம் சுற்று வட்டாரம் முழுவதும் பரவியது. தொடர்ந்து இரு தினங்களாக சிறுவன் பிச்சை எடுத்த தகவல் மாவட்ட ஆட்சியரை எட்ட, அவர் உடனடியாக லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரைப் பணியில் இருந்து விடுவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஆட்சியர் லட்சுமி, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டி ருப்பதாகக் கூறினார். லஞ்சம் கோரியிருந்தால் கிராம நிர்வாக அலுவலர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அஜித்குமார் வசிக் கும் கிராமத்துக்குப் புதிய நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுவனின் குடும்பத்தாருக்கு நிதி கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை மேற்கொண்டுள்ளார்.