ஏமாற்று விளம்பரங்களில் தோன்றினால் சிறை, அபராதம்

'கருப்பாக இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள், ஒரே வாரத் தில் சிவப்பாகிவிடலாம்' என்ற வகையிலான மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க இந்திய அரசுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 30 ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்து விட்டு, புதிய நுகர்வோர் பாது காப்பு மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இது தொடர்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.

அந்தக் குழுவின் விரிவான அறிக்கையை ஆராய்ந்த நுகர்வோர் நலத்துறை அமைச்சு, ஏமாற்று விளம்பரங்களைக் கட்டுப் படுத்துதல், அவற்றில் தோன்றும் நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங் களுக்குச் சமூகப் பொறுப்பு ணர்வை உண்டாக்குதல், கலப் படம் செய்தால் கடும் தண்டனை போன்ற அதில் இடம்பெற்றிருந்த சில முக்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. இதனிடையே, இது குறித்த வரைவு மசோதாவில் நுகர்வோர் நலத்துறை அமைச்சால் முன்மொ ழியப்பட்ட மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அமைச்சர்நிலைக் கூட்டம் நேற்று நடக்கவிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மோசடி விளம்ப ரங்களில் தோன்றும் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கிட்டத்தட்ட எல்லா அமைச்சுகளும் ஒத்துக்கொண்டதாகத் தெரிவிக் கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!