தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் அமைத்த ரகசிய குழு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரகசிய வியூகங்கள் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் ரகசியக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டதை அடுத்து சோர்வடைந்திருந்த திமுகவினரை பல வழிகளிலும் உற்சாகப்படுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது உள்ளாட்சித் தேர் தலை எதிர்கொள்ள அவர் முக்கிய நிர்வாகிகளைத் தயார் படுத்தி வருகிறார்.

இம்முறை மாவட்டச் செயலர் களை நம்பாமல் அதற்கடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகளை அவர் முடுக்கி விட்டுள்ளார். ஸ்டாலின் அமைத்திருப்ப தாகக் கருதப்படும் இந்த ரகசிய குழுவே தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் என்றும், இக்குழுவின் செயல்பாடுகளில் மாவட்ட செயலர்கள் குறுக்கிட இயலாது என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய குழு தயாரிக்கும் வேட்பாளர் பட்டியலைப் பார்வை யிட்டு திமுக தலைவரும் ஸ்டா லினும் ஒப்புதல் அளித்த பின்னர் அப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இம்முறை ஒன்றிய, நகரச் செயலர்களின் பரிந்துரை களையும் திமுக தலைமை ஏற்காது எனத் தெரிகிறது. ஸ்டாலின் அமைத்துள்ள ரகசிய குழுவில் அவருக்கு நெருக்கமானவர்களே இடம்பெற் றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அக்குழுவில் மாவட்டச் செயலர்கள் யாரும் இடம் பெறவில்லை என்றும் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!