சிறுவாணி அணைப் பகுதியில் சாலை அமைக்கும் கேரளா

கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சித்தூர் பகுதியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது கேரள அரசு. இது தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் சாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது கேரள அரசு. இதையடுத்து சித் தூர் மலைப்பகுதியில் அம்மாநில நீர்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அங்கு சாலை வசதியை ஏற்படுத்த முடிவாகியுள் ளது. இதன் அடிப்படையில், சாலைகள் போடுவதற்காக மணல், சல்லிக் கற்கள் கொட்டப்பட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள அரசின் இந்நடவடிக்கை யால் தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகி றது. இந்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட வேண்டும் என கோவையில் உள்ள 42 மலையாளி சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய மலையாள சமாஜ் அமைப்பின் தலைவர் ராஜ கோபாலன், கேரள அரசின் இத்த கைய நடவடிக்கை காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மக்க ளின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப் படும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!