திரைப்பாடல்களில் ஆபாச வார்த்தைகள்: நீதிபதி அதிருப்தி

சென்னை: திரைப்படப் பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இளையர் ஒருவர் சாலையில் சென்ற இளம்பெண்ணை நோக்கி பாடல் பாடி கேலி செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த அவர் திரைப்பட பாடல்கள் இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும் என கருத்து தெரிவித்தார். "திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெறச் செய்வது, வன்முறைக் காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால் நம்முடைய உயர்ந்த கலாச்சாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர்.

திரைப்படம் போன்ற ஊடகங்கள் இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்க ளுக்கு மறக்காது," என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.2016-09-04 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!