சிறுவாணி ஆற்றில் அணை: கேரளாவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுயநலத்திற்காக ஆட்சி நடத்து வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் கேரளாவை கண்டித்து கோவையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, அண்டை மாநில முதல்வர்களோடு நல்ல உறவை வைத்திருந்ததாகக் கூறினார். "ஜெயலலிதா தன்னுடன் இருக்கும் குடும்பத்தின் நலனுக்காகவே ஆட்சி செய்கிறார். வசூல் செய்யும் அமைச்சர்களுக்காக ஒரு ஆட்சியை நடத்துகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே உச்ச நீதிமன்றம் ஓடி சென்று தடையுத்தரவு பெற்ற ஜெயலலிதா, சிறுவாணி அணை விவகாரத்தில் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதே எனது கேள்வி.

"இந்தப் போராட்டம் இன்றோடு முடியாது. ஜெயலலிதா மெத்தனமாக இருந்தால் திமுகவின் போராட்டம் வேறு வகைகளில் தொடரும். இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் மு.க.ஸ்டாலின். தாம் ஒரு முதல்வர் என்பதை மறந்துவிட்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசிய அவர், திமுகவினருக்கு எந்தவித அருகதையும் யோக்கியதையும் இல்லை என பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசுவதை ஏற்க இயலாது என்றார். "காவல்துறையினரின் வீட்டு வசதி தேவைகள் தொடர்பாக முன்பு அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்து நான் பேரவையில் ஒரு கேள்வியை எழுப்பினேன். அதற்குப் பதிலளிக்காமல் இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது, என்ன அருகதை உள்ளது என்று முதல்வர் கேட்டார். தாம் ஒரு முதல்வர் என்பதை மறந்து அவர் தகுதிக்கு இப்படிப் பேச லாமா?

"உடனே நான் எழுந்து இன்று சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அவையில் அமர்ந்துள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கக் கூடிய என்னைப் பார்த்து முதல்வர் இப்படிக் கேட்கிறார். இதைச் சொல்ல அவருக்கென்ன என்ன தகுதி, யோக்கியதை இருக்கிறது எனத் திருப்பிக் கேட்டேன்," என்றார் ஸ்டாலின். ஆனால் தாம் பேசியது மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!