சுனாமி பாவனை பயிற்சி

ஹைத­ரா­பாத்: இந்­தி­யப் பெருங்க­டல் பகுதியை ஒட்­டி­யுள்ள இந்தியா உள்­ளிட்ட 23 நாடுகள் பங்­கெ­டுக்­கும் இரண்டு நாள் சுனாமி பாவனை பயிற்சி நேற்று தொடங்­கி­யது. இந்த பாவனை பயிற்­சி­யின் மூலம் எச்­ச­ரிக்கை, பேரி­டர்­களைக் கண்ட­றி­தல் போன்றவை சோதிக்­கப்­படும். மேலும் அதி­கா­ரி­களுக்கு கிடைக்­கும் பேரிடர் எச்­ச­ரிக்கை தக­வல்­கள் சரியான நேரத்­தில் மக்­களைச் சென்றடை­கின்ற­னவா என்­ப­தும் கண்ட­றிப்­படும். நேற்று காலை தொடங்கப்­பட்ட இந்த பாவனை பயிற்­சி­யில், இந்­தோ­னீ­சி­யா­வின் தெற்கு சுமத்­ரா­வில் ரிக்டர் அளவில் 9.2 என நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தாக கொள்­ளப்­பட்­டது.

இந்த நில­ந­டுக்­கத்­தால் ஏற்­படும் சுனாமி அந்த­மான் நிக்­கோ­பர் தீவு­களை­யும் சென்னை உள்­ளிட்ட இந்­தி­யா­வின் கிழக்கு கடலோரப் பகு­தி­களை­யும் தாக்கும். 'யுனெஸ்கோ' அமைப்பு ஏற் பாடு செய்­துள்ள இந்த பாவனை பயிற்­சி­யின்­போது, சுனாமி எச்­ச­ரிக்கை கிடைத்த மூன்று மணி நேரத்­தில் இந்தியக் கட­லோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் சுமார் 40,000 மக்களை அங்­கி­ருந்து எவ்வாறு பாது­காப்­பான இடத்­திற்கு வெளி­யேற்­று­வது என்பது இந்திய அதி­கா­ரி­களுக்கு பயிற்­சி­யாக அமைந்தது.

ஒடிசா, ஆந்திரா, தமிழ்­நாடு, மேற்கு வங்கம், கேரளா, குஜராத், கோவா ஆகிய மாநி­லங்களில் கடலோரக் கிரா­மங்களில் இந்த பாவனை பயிற்சி நடத்­தப்­பட்­டது. தமிழகத்தில் மரக்காணம் அருகே உள்ள பனிச்சமேடு கிராமத்தில் இந்த பாவனை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!