‘கலவரங்களைச் சமாளிக்க காஷ்மீர் அரசு தவறிவிட்டது’

புது­டெல்லி: காஷ்மீர் நில­வ­ரம் குறித்து ராஜ்­நாத்­சிங் தலைமை­யில் நடந்த அனைத்­துக் கட்சிக் கூட்­டத்­தில், அம்­மா­நில அரசு கல­வ­ரங்களைச் சமா­ளிக்கத் தவ­றி­விட்­ட­தாக குற்றம் சாட்­டப்­பட்­டது. நேற்று நடந்த இக்கூட்­டத்­தில் காஷ்மீர் பிரி­வினை­வா­தி­களு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வது இல்லை என்றும் முடிவு செய்­யப் ­பட்­டுள்­ளது.

அங்கு அமைதியை நிலை­நாட்­டத் தேவையான அனைத்து நட­வ­டிக்கை­களை­யும் எடுப்­பது என்றும் இந்தக் கூட்­டத்­தில் முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது. முதற்கட்டமாக காஷ்மீர் பிரி­வினை­வாதத் தலை­வர்­களுக்­கான பாது­காப்பு ஏற்­பாடு­களை விலக்கிக் கொள்­ள­வும் பல்வேறு சலுகை­களை ரத்து செய்­ய­வும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

இது தவிர பிரி­வினை­வாதத் தலை­வர்­களுக்கு வெளி­நா­டு­கள் பண உதவி செய்­வதைத் தடுக்­க­வும் அவர்­களின் வெளி­நாட்­டுப் பய­ணங்களைக் கட்­டுப்­படுத்­தும் வகையில் அவர்­களின் விசாக்­களைத் திரும்ப பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்கை­களை மேற்­கொள்­ள­வும் முடிவு செய்­யப்­பட்டு உள்­ள­தாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரி­வித்­தார். இதற்கிடையே, காஷ்மீரில் நேற்று மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். மேலும் நேற்று காலை ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் காயமடைந் தனர்.

காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நடந்த வன்முறையில் 75 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!