கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்து: இருவர் பரிதாப பலி

விழுப்புரம்: நட்சத்திரத் தங்குவிடுதியின் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாகப் பலியாகினர். நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனிமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரிகள் மணிகண்டன் (35 வயது), சரவணன் (40 வயது), வடிவேல் (35 வயது) ஆகியோர் அப்புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மேல் பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதையடுத்து மூவரும் கீழே விழுந்தனர். இவ்விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!