தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக் கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, இப்புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலையானது வங்கக் கடலில் உருவாகி உள்ளதாகத் தெரிவித்தார். "மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் 43.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

"அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும்," என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை யில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமை காலை சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!