ஹஜ்ஜுப் பெருநாள்: யாக்கூப் இப்ராஹிம் வாழ்த்துச் செய்தி

இன்று முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுவதையொட்டித் தொடர்பு, தகவல் அமைச் சர் யாக்கூப் இப்ராஹிம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "சவூதி அரேபியாவின் அராஃபா வுக்கு ஹஜ்ஜு யாத்திரை மேற் கொண்டிருக்கும் நமது சிங்கப் பூரர்கள் பாதுகாப்பாக தங்களது புனிதக் கடமையை நிறைவேற்று கிறார்கள். சிங்கப்பூரில் குர்பான் சடங்கிற்கு ஆஸ்திரேலியாவிலிருந் தும் அயர்லாந்தில் இருந்தும் செம்மறி ஆடுகள் வந்துள்ளன. எதிர்பாராத விதமாக, அயர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஆடு களில் சில பயணத்தின்போது உயிர்பிழைக்கவில்லை என்பதை அறிந்தேன்.

இருந்தபோதிலும், இவ்வாண்டு குர்பான் சடங்கிற்கு உறுதி எடுத்த அனைவரும் அறிவித்தபடி சடங்கை நிறைவேற்றுவார்கள் என்று சிங்கப்பூர் பள்ளிவாசல் களின் குர்பான் குழு உறுதி அளித்துள்ளது. ஹஜ்ஜு புனிதப் பயணமும் குர்பான் சடங்கும் முஸ்லிம்களின் அர்த்தம் பொதிந்த சடங்குகள். இச்சடங்குகள் நல்ல முறையில் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முஸ்லிம்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெரு நாள் வாழத்துகள்," என்று குறிப் பிட்டுள்ளார் முஸ்லிம் விவகாரங் களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு யாக்கூப்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!