இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத் தரவுப்படி தமிழ்நாட்டுக்கு விநா டிக்கு 15,000 கன அடி காவிரி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்துவிட்டது முதல் இரு மாநி லங்களுக்கு இடையிலும் கொந் தளிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்தவிடப்பட்ட செயலைக் கண் டித்துக் கடந்த வெள்ளிக்கிழமை முழுஅடைப்புப் போராட்டத்தை கன்னட அமைப்பினரும் விவசாயி களும் நடத்தினர். அதன் பிறகு பதற்றம் ஓரளவு தணிந்து இயல்பு நிலைத் திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் சந்தோஷ் என்னும் தமிழ் இளையர் பெங்களுருவில் தாக்கப்பட்டார்.
அவர் தாக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கன்னட எதிர்ப்புச் செயல்கள் வெடித்தன. சென்னை மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு நேற்று அதிகாலை 3.30 மணிய ளவில் ஆயுதங்களுடன் சென்ற 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தியது. மூன்று பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. அவை வெடித்துச் சிதறி லேசாக தீப்பிடித் தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சத்தம் கேட்டு ஓடிவந்த காவலாளியை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியது. ஹோட்டலின் முன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஐஸ்கிரீம் பார்லரில் நுழைந்த கும்பல் கண் ணாடிகளை அடித்து நொறுக்கி யது. பின்னர் அருகிலிருந்த உண வகத்தில் புகுந்து அந்த அறையை சூறையாடியது. பின்னர் வெளியில் வந்த அவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படம்: தமிழக ஊடகம்