12,000 பேருக்கு சிக்குன்குனியா; இந்தியா முழுவதும் பரவல்

இந்தியா முழுவதும் சிக்குன் குனியா பரவி வருவதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் புதுடெல்லி கடுமையாகப் பாதிக்கப்பட்டு இதுவரை அங்கு ஏழு பேர் சிக்குன்குனியாவுக்கு பலியாகிவிட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் டெல்லி முழுவதும் அந்நோய் பரவி பலரின் உயிரைப் பறிக்கும் அபாயம் நிலவுகிறது. மக்கள் அச்சத்தில் உறைந்திருக் கும் அதேவேளை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடா மல் டெல்லி அரசும் மத்திய அரசும் ஒன்றையொன்று குறைகூறி வரு வதாகப் பொதுமக்கள் புலம்புகின்றனர். 1,057 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,158 பேருக்கு டெங்கி தொற்றியுள்ளது.

குறிப்பாக, டெல்லி ஆட்சி நிர்வாகத் தலைமையில் தலைவர் கள் அனைவரும் தற்போது டெல்லியில் இல்லை என்பது வியப்புக்குரிய செய்தி. முதல்வர் கெஜ்ரிவால் ஆந்திராவில் சிகிச்சை பெறுகிறார். ஆளுநர் நஜீப் ஜங் அமெரிக்கா சென்றுள்ளார். துணை முதல்வரும் டெல்லியில் இல்லை. டெல்லி மட்டுமல்லாது தென் மாநிலங்கள் வரை பரவலாக சிக்குன் குனியா நோயாளிகளின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது. ஆகஸ்ட் 31 வரை 12,255 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட் டதாக தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆக அதிகமாக கர்நாடக மாநிலத்தில் 8,941 பேருக்கும் மகாராஷ்டிராவில் 839 பேருக்கும் சிக்குன்குனியா தொற்றியுள்ளது. ஆந்திராவில் 492 பேர் இந்நோ யால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி தவிர இதர மாநிலங் களில் சிக்குன்குனியாவால் யாரும் மரணமடையவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!