மாவாட்டும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி

சென்னை: மாவாட்டும் இயந்திரத்தில் மாவாட்டியபோது, இளம்பெண் அணிந் திருந்த துப்பட்டா அதில் சிக்கிக் கொண்டது. இயந்திரம் வேகமாகச் சுழன்றதால் துப்பட்டாவும் அப்பெண் ணின் கழுத்தை வேகமாகச் சுற்றி நெருக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 24 வயதான ஹப்சிபா என்ற அப்பெண்ணும் அவரது தாய் முத்து லட்சுமியும் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் மாலை இருவரும் இட்லிக்கு மாவாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹப்சிபா பஞ்சாபி உடுப்பு அணிந்திருந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மாவாட்டும் இயந்திரத்தில் ஹப்சிபா வின் துப்பட்டா சிக்கிக் கொண்டது. இயந்திரம் வேகமாகச் சுழன்றதால் அதில் சிக்கிய துப்பட்டா அவரது கழுத்தை நெருக்கியது. உதவி கேட்டு குரல்கூட எழுப்ப இயலாத நிலையில், சம்பவ இடத்தி லேயே கழுத்து இறுக்கப்பட்டு பரிதாப மாக உயிரிழந்தார் ஹப்சிபா. தனது கண்ணெதிரே நிகழ்ந்த இச்சம்ப வத்தைத் தடுக்க இயலாத அவரது தாய் முத்து லட்சுமி அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளார்.

Loading...
Load next