குப்பை அகற்றி சேவையாற்றும் 81 வயது முதியவர்

சென்னை: பணி ஓய்வு பெற்றது முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்புறத்தில் குவியும் குப்பைகளைத் தினந்தோறும் அகற்றி வருகிறார் தாயுமான சாமி. தற்போது 81 வயதாகும் இவர், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வசந்தம் குடியிருப்பில் வசிக்கிறார். ரயில்வே துறையில் பணி யாற்றிய அவர் கடந்த 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தனது குடியிருப்பில் குவியும் குப்பைகளை அகற்றத் தொடங்கியுள்ளார்.

அடைப்பு ஏற்பட்ட சாக் கடைக் கால்வாய்களில் கையை விட்டுச் சரி செய்யவும் அவர் தயங்குவதில்லை. பாதாளச் சாக்கடையில் குச்சிகளை விட்டு, தடையின்றிக் கழிவு நீர் செல்ல வைக்கிறார். “எனது தாயாரிடம் இருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டேன். இதைச் செய்வ தில் ஒருவித மனநிறைவு கிடைத்ததால் தொடர்ந்து செய் கிறேன். இதற்காக மற்றவர்க ளின் நன்றியை, பாராட்டை எதிர்பார்ப்பதில்லை,” என்கிறார் தாயுமானசாமி. அண்மைக் காலமாக இவரால் சரிவர நடக்க முடிய வில்லை. எனினும் வீட்டில் முடங்கிவிடவில்லை. நடப்ப தற்கு உதவும் கருவிகளின் துணையோடு, வழக்கம்போல் குப்பை அகற்றும் பணியைச் செய்து வருகிறார். இவரைப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

Loading...
Load next