உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக ஆயத்தமான நிலையில் திமுகவும் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது. அதிமுகவில் நேற்று முதல் வேட்பாளர்கள் விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இம்மாதம் 22ஆம் தேதி வரை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவும் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் சேர விருப்பமில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

Loading...
Load next