அரசு ஒத்துழைப்புக்குக் கோரிக்கை விடுத்தேன் - பொன். ராதா

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நேற்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற சந்திப்பில் இருவரும் 20 நிமிடங்கள் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் உயர் அதி காரிகளும் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “எனது துறை தொடர்பான விவகாரம் குறித்து முதல்வரிடம் விரிவாக விவாதித்தேன். குளச்சல் இனயம் துறைமுகத்துக்கு ஆய்வு மேற்கொள்வது குறித்துத் தமிழக அரசு ஒத்துழைப்புத் தருமாறு கோரினேன். அதற்கு முதல்வர் முழு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தார்,” என்றார்.

மேலும் பேசிய அவர், கிழக்குக் கடற்கரை சாலையை 4 வழிச்சாலை யாக மாற்றுவது குறித்தும் விரி வாக விவாதித்ததாகவும் தெரிவித் தார். செய்தியாளர்களின் கேள்வி களுக்கும் பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். கேள்வி: காவிரிப் பிரச்சினை காரணமாகத் தமிழகத்தில் பந்த் நடத்தப்படுகிறதே? பதில்: காவிரிப் பிரச்சினையில் தமிழக முதல்வர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். பெருமையாக, திறமையாகக் கையாண்டுள்ளார். கேள்வி: இன்று பந்த் நடப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பதில்: தமிழகத்தில் முழு அடைப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. வியாபாரிகள் அமைதியாகக் கடைகளை அடைத்துள்ளனர்.

நாங்கள் எங்கள் கருத்து களையும் வெளிப்படுத்தியிருக் கிறோம். கேள்வி: கர்நாடகாவில் வன் முறை நடந்துள்ளதே? பிரதமரிடம் இதுபற்றிப் பேசுவீர்களா? பதில்: பிரதமரைச் சந்திக்கும் போது கண்டிப்பாக இது பற்றிப் பேசுவேன். கேள்வி: கர்நாடகாவில் ஏற் பட்டுள்ள கலவரத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியும் காரணம் என்று சொல்கிறார்களே? பதில்: அரண்டவன் கண் ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பொருளற்ற அறிக்கை களுக்குப் பதில் சொல்ல விரும்ப வில்லை என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சொன்னார்.

Loading...
Load next