மனைவியின் மூக்கை அறுத்த கணவனுக்கு போலிஸ் வலைவீச்சு

லக்னோ: மனை­வி­யின் நடத்தை­யில் சந்­தே­கப்­பட்ட கண­வன் அவ­ரது மூக்கை அறுத்து எரிந்­துள்­ளார். இந்த சம்ப­வம் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் நிகழ்ந்­துள்­ளது. நரோதா ஹன்ஸ்­ராம் என்­னும் கிரா­மத்தைச் சேர்ந்த­வர் சஞ்­சீவ் ரத்­தோர். இவ­ரது மனைவி கம்­லேஷ். இரு­வ­ருக்­கும் மண­மாகி ஏழாண்­டு­கள் ஆகி­விட்­டன. இவர்­களுக்கு ஆறு வய­தில் ஒரு பெண் குழந்தை­ உள்­ளது. இந்­நிலை­யில் சஞ்­சீவ் வேலை முடிந்து மது அருந்­தி­விட்டு போதை­யில் தள்­ளா­டி­ய­ப­டி­தான் வீட்­டுக்கு வரு­வார். அவ்­வாறு ஒரு நாள் அவர் போதை­யில் வீட்­டுக்கு வந்தார். அப்­போது அவ­ரது மனைவி கம்­லேஷ் யாரோ ஒரு­வ­ரு­டன் கைத்­தொலை­பே­சி­யில் உரை­யா­டிக் கொண்­டி­ருந்தார். இதனால் ஆத்­தி­ர­மடைந்த சஞ்­சீவ், தன் மனை­வி­யு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார். அந்த வாக்­கு­வா­தம் கைக­லப்­பாக மாற, கம்­லே­‌ஷின் நுனி மூக்கை ஒரு கத்­தி­யால் அறுத்துவிட்டு தப்­பி­யோடி விட்­டார். ­து­டி­யாய்த் துடித்த கம்­லேஷை அக்­கம்பக்­கத்­தி­னர் மருத்­து­வ­மனை­யில் சேர்த்­த­னர். சஞ்சீவ் ரத்­தோரை போலி­சார் வலை­போட்டுத் தேடி வரு­கின்ற­னர்.

Loading...
Load next