பெங்களூரிலிருக்கும் பெரிய நிறுவனங்கள் வெளியேறலாம்

பெங்க­ளூரு: பெங்களூரில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனங்கள் இப்போது அங்கிருந்து வெளியேறி வேறு மாநிலங்களுக்குச் செல்லக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெங்களூரில் அடிக்கடி நிகழும் குற்றச்செயல்கள், வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்­குள்ள பெரிய தொழில் நிறுவனங்­கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பெரிய அளவில் வர்த்தகம் முடங்கியுள்ளது. அங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்களை நம்பி வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நிறுவனங்களும் ஏராளமான பணி களை அளித்து வருகின்றன.

அங்கு தொடர்ச்சியாக நடை பெற்று வரும் வன்முறையால் பல மில்லியன் டாலர் வருமானத்தை அந்நிறுவனங்கள் இழந்துள்ளன. இதனால் அந்நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்­கானோரின் வாழ்வாதாரம் பாதிக்­­கப்பட்டுள்ளது. மத்­திய அர­சின் வாக­னச் சட்டம், காவிரி, மக­தாயி நதி­நீர்ப் பங்­கீடு விவ­கா­ரங்களுக்­காக ஒரே மாதத்­தில் கர்­நா­டகாவில் பல்வேறு முழு அடைப்­புப் போராட்­டங்கள் நடை­பெற்­றுள்­ளன. மேலும், காவிரி விவ­கா­ரத்­தில் பல்­வேறு இடங்களில் கல­வ­ரம் ஏற்­பட்­டு தொழில் நிறு­வ­னங்கள், கடை­கள், பேருந்­து­கள் சேதப்­படுத்­தப்­பட்­டன. பேருந்து, ரயில்­கள் நிறுத்­தப்­பட்­டன. இதனால், பணி­யி­டங்களுக்­குச் செல்ல முடி­யா­மல் பலர் அவ­திப்­பட்­ட­னர். இதனால் பல நிறு­வ­னங்கள் செயல்­ப­டா­மல் முடங்­கிப்போயின.

இது­கு­றித்­துத் தக­வல் ­தொ­ழில் நுட்ப நிறு­வ­னத்­தின் உய­ர­தி­காரி ஒரு­வர் கூறுகை­யில், பெங்க­ளூ­ரில் தக­வல் தொழில்­நுட்­பம், உயி­ரித் தொழில்­நுட்­பம், விண்­வெளி, விமா­ன­வி­யல், நானோ தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு தொழில் நிறு­வ­னங்கள் உள்­ளன. இதன்­மூ­லம் இந்தியா கோடிக்­க­ணக்கான ரூபாய் வரி வரு­வாய் பெற்று வருகிறது. இந்த நிறு­வ­னங்க­ளால் உள்­ளூர் மக்­கள் வேலை­வாய்ப்­புப் பெற்று வரு­கின்ற­னர். இந்த நிறு­வ­னங்கள் தடை­யின்றிச் செயல்­படு­வ­தால் பல­ரின் வாழ்­வா­தா­ரம் உறு­தி செய்­யப்­படு­கிறது.

இப்போது அங்கு பெருகிவரும் வன்முறைகளால் தொழில், வர்த்­த­கச் சூழல் பாதித்துள்ளது. கடந்த சில நாட்க­ளாக தமி­ழர்­களுக்கு எதி­ராக நடந்த கல­வ­ரங்கள் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்களின் செயல்­பாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்­திர மாநி­லத்தைப் பிரித்­துத் தெலுங்கானா மாநி­லத்தை அமைக்­கக் கோரி ஹைத­ரா­பாத் போன்ற நக­ரங்களில் நடந்த தொடர் வன்­முறை­களால் அங்­குள்ள தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் வேறு மாநி­லங்களுக்­குச் சென்றன. ஹைத­ரா­பாத்­தில் செயல்­பட்ட பல நிறு­வ­னங்கள் பெங்க­ளூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்தன. இதே­போல இப்போது பெங்களூருவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகர்களுக்கு இடம் பெயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!