தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

புது­டெல்லி: ­­­தண்டனை பெற்ற குற்­ற­வா­ளி­கள் தேர்­த­லில் போட்­டி­யிட வாழ்­நாள் தடை விதிக்­கக் கோரி மனு­வுக்குப் பதி­ல­ளிக்­கு­மாறு மத்­திய அர­சுக்கு டெல்லி உயர் ­நீ­தி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. அர­சி­ய­லில் உள்ள பலர் மீது கொலை, கொலை முயற்சி, சதி போன்ற குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன. இதைத் தடுக்க தண்டனை பெற்ற குற்­ற­வா­ளி­கள் 6 ஆண்­டு­கள் தேர்­த­லில் போட்­டி­யிட மக்கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டத்­தின் கீழ் தடை விதிக்­கப்­படு­கிறது. அதற்­குப் பின்னர் அவர்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­ட­லாம்.

இதை எதிர்த்­துப் பாஜக பிர­மு­க­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான அஷ்­வினி குமார் உபாத்­யாயா, டெல்லி உயர் நீதி­மன்றத்­தில் பொது­ந­லன் மனு ஒன்றைத் தாக்கல் செய்­துள்­ளார். அரசுப் பணி­களில் இருப்­ப­வர்­கள் நீதி­மன்றத்­தால் குற்­ற­வாளி என்று அறி­விக்­கப்­பட்­டால் அவர்­கள் பணி நீக்கம் செய்­யப்­படு­கின்ற­னர். வாழ்­நாள் முழு­வ­தும் அவர்­கள் மீண்­டும் பணி­யில் சேர்த்­துக்கொள்­ளப்­படு­வ­தில்லை. ஆனால், நீதி­மன்றத்­தால் குற்­ற­வாளி என அறி­விக்­கப்­பட்­ட­வர்­கள், தேர்­த­லில் போட்­டி­யிட 6 ஆண்­டு­களுக்கு மட்­டுமே தடை விதிக்­கப்­படு­கிறது. அதன்­பி­றகு போட்­டி­யிட வழி­வ­குக்­கும் மக்கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டப்­பி­ரிவு சட்­ட­வி­ரோ­த­மா­னது.

Loading...
Load next