அப்பாவி மக்களின் உயிரை எடுப்பதுதான் தவ வாழ்க்கையா? - ராமதாஸ்

“அப்பாவி மக்களின் உயிரை எடுப்பதுதான் ஜெயலலிதாவின் தவ வாழ்க்கையா?” சென்னை: தவ வாழ்வு வாழ்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது நல்ல நகைச்சுவை என பாமக நிறு வனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை யில், தமது நிகழ்ச்சிகள் சொகுசாக அமைய வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களின் உயிரை எடுப்பதுதான் அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்க்கையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் அதிமுக தொண் டர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், தாம் மக்களுக்காக தவ வாழ்வினை வாழ்ந்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட் டிருந்தார். அதற்குப் பதிலடியாகவே ராமதாசின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. “கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் தவ வாழ்க்கையின் அடை யாளம்தான். ஆனால், கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றாதவர் ஜெயலலிதா. மேலும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றவர்.

2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற அவர் முயற்சி செய்யவில்லை,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். தவ வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சம் நேர்மை என்று குறிப்பிட்டுள்ள அவர், அளவுக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிக்கியவர் ஜெயலலிதா என சுட்டிக்காட்டியுள்ளார்.

“மக்களைத் தவிக்க விடும் வாழ்க்கை. சொத்துக்கள் குவித்து அதிகாரத்தை அனுபவித்து, கட்சி நிர்வாகிகளையும் அமைச்சர்க ளையும் கொடுமைப்படுத்தி வாழும் வாழ்க்கையை தவ வாழ்க்கை என ஜெயலலிதா கூறினால் அதை அவரிடம் பதவிகளை எதிர்பார்க் கும் அடிமைகள் வேண்டுமானால் நம்புவார்கள். மானமுள்ள மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Loading...
Load next