அதிமுகவுக்கு துணை அதிபர் பதவி: ஜெயலலிதா மும்முரம்

இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி யின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜூலை 25ஆம் தேதி முடிவடை கிறது. அதேபோல துணை அதிபர் முகமது ஹமித் அன்சாரியின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நிறைவடை கிறது. எனவே அடுத்தாண்டு ஜூலை மாதம் இந்த இரு பதவி களுக்கும் தேர்தல் நடக்க இருக் கிறது. இப்பதவிகளுக்கான தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பதை மத்தி யில் ஆட்சி நடத்தும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் முடிவு செய்ய வில்லை. இப்போதைய அதன் முழுக் கவனமும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் உள்ளது. இத்தேர்தலுக்குப் பின்னரே அதிபர் தேர்தல் பற்றி அக்கூட்டணி ஆலோசிக்க உள்ளது.

ஆனால், காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற் கெனவே பத்தாண்டுகளாக துணை அதிபர் பதவியில் இருக்கும் ஹமித் அன்சாரியையே அதிபர் பதவிக்கு நிறுத்த விரும்புகின்றன. இருப்பினும், அதிபர், துணை அதிபர் தேர்தல்களில் அதிமுகவின் முடிவு முக்கியமாகக் கருதப்படுகிறது. காரணம் இரு நாடாளுமன்ற அவைகளிலும் சேர்த்து அந்தக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள் ளனர். அத்துடன் மாநில சட்ட மன்றத்தில் 124 உறுப்பினர்களும் உள்ளனர். அதிபர் தேர்தலில் இரு அவை களின் உறுப்பினர்களோடு மாநி லங்களின் சட்டமன்ற உறுப்பினர் களும் வாக்களிக்க வேண்டும். எனவே அதிமுகவின் தயவு பாஜக வுக்கு நிச்சயம் தேவைப்படும்.

Loading...
Load next