நத்தம் விசுவநாதன் வீடு, அலுவலகங்களிலிருந்து 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டையும் அலுவலகங்களையும் சோதனையிட்ட வருமான வரித்துறை அதி காரிகள் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் உள்ள 'பைனான் சியர்' அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 4.70 கோடி ரூபாயைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இந்தப் பணம் யாருடையது. இதன் பின்ன ணியில் இருப்பவர் யார் என்பது குறித்து விசாரணை தீவிரமானது. இதையொட்டி வருமான வரித் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அன்புநாதனுக்கும் நத்தம் விசுவநாதன், அவரது மகன் அமர்நாத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்தத் தொடர்பு வட்டம், சென்னை மேயர் சைதை துரை சாமி, அவரது மகன் வெற்றி ஆகியோர் வரை நீண்டதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அது உறுதிச் செய்யப்பட்டது.

இதனால் இம்மாதம் 12ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள விசுவநாதன் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு, நண்பர்களின் வீடு கள் மற்றும் சைதை துரைசாமி யின் ராஜகீழ்ப்பாக்கம் பண்ணை வீடு, சென்னை வீடு என எட்டு இடங்களில், வருமான வரித்துறை யினர் சோதனையிட்டனர். இது பற்றிய விவரம் நேற்று முன்தினம் வருமான வரித் துறை யினர் வெளியிட்டனர். "நத்தம் விசுவநாதன், வெற்றி துரைசாமியின் வீடுகளில் சோதனை தொடர்கிறது. இருப் பினும் இதுவரை கிடைத்தவற்றை மதிப்பிட்டுள்ளோம். அவர்களது வீடுகளில் கணக்கில் வராத பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனால் சென்னையில் உள்ள நத்தம் விசுவநாதன் கூட்டாளி வீட்டில் 25 லட்சம் ரூபாய் சிக்கியது," என்று அவர்கள் கூறினர்.

மேலும், நத்தம் விசுவநாதன் ஏராளமான இடங்களில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக 300 கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் மீது கூறப்படும் ஊழல் புகார்களுக்கும் சிக்கியிருக்கும் ஆவணங் களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த ஆவணங்களை ஒவ் வொன்றாக கிளறுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நத்தம் விசுவநாதன் கைது செய்யப்பட்ட தாக வதந்தி பரவியது. ஆனால் அதனை அமலாக்கத் துறை அதிகாரிகள் மறுத்தனர். "அவர் மின்துறை அமைச்சராக இருந்தபோது ஏராளமான பணம் ஈட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் பணம் ஈட்டிய வழியையும் கண்டுபிடித்து விட்டோம்," என்றும் வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!