‘கெஜ்ரிவால் நாக்கு நீளம், அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தனர்’

புதுடெல்லி: பிரதமர் மோடியை அதிகமாக விமர்சித்ததன் காரணமாகத்தான் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் நாக்கிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியுள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாக்கு நீளம். அதனால்தான் அண்மையில் அவருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்,” என்று கேலி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயர் பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Loading...
Load next